குருநகர் மீன்வலை உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆராய்வு

north sea1யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் கீழான மீன்வலை உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டு தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

குறித்த மீன்வலை உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் அவர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட புதிய தொழிற்துறை இயந்திரங்களையும் மற்றும் ஏனைய உபகரணங்களையும் நேரில் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள், அவை தொடர்பில் துறைசார்ந்தோரிடமும் கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே உற்பத்தி நிலையத்தினது மேம்பாடு மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் தரமான மூலப்பொருட்களின் கொள்வனவு, உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பிலும் அவதானம் செலுத்தினார்.

அத்துடன், எதிர்காலத்தில் உற்பத்திகளை மேலும் நவீனப்படுத்துவது மட்டுமன்றி விரைவுபடுத்துவது, சந்தை வாய்ப்பை அதிகரிப்பது, மற்றும் தொழிலாளர்களது நலன்சார் விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஊடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தினார்.

Related Posts