யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட குருநகர், பாசையூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பேண இன்றைய தினம் முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
அந்தப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கும் குறித்த பகுதி ஊடான பேருந்து சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்வதற்கும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.