குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு பலர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை பொலிஸ் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்க நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ள பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை , ஏனைய ஐவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Related Posts