குருநகர் கடற்கரையில் பாரிய தளமாக விஸ்தரிக்கப்படும் இராணுவ முகாம்!

kurunagar_army_baseயாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பாரிய தளம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.

யாழ்.நகரில் ஏற்கனவே சிங்கள மகா வித்தியாலயத்தின் காணியில் பாரிய தளமொன்று நகரின் மத்தியிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் இத்தளமும் அமைக்கப்படுகின்றது.

சிறிய படைமுகாமாகக் காணப்பட்ட இம்முகாமானது தற்போது மிகப்பெரிய தளமாக மாற்றப்படுகின்றது.

இதற்காக முழுமையாக இராணுவத்தினர் இரவு பகலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தோடு இத்தளத்திற்கு பெருமளவான இராணுவத்தினர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் கோட்டையில் ஏற்கனவே இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் கடற்கரையோரமாக இராணுவத்தினர் இரண்டு கிலோ மீற்றருக்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகின்றது.

இவ்வாறு இராணுவத்தினர் பாரிய தளமொன்றை மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த குருநகர் பகுதியில் அமைக்கப்படுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts