தீயில் எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண்ணொருவர் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை 10.50 மணியளவில் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குருநகர் வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வருகின்ற 36 வயதுடைய மரியறோசி என்ற பெண்ணே தீயில் எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வாரத்தில் இப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இது ஆகும்
தொடர்புடைய செய்தி