குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து வந்த 42 வயதுடைய குறித்த இலங்கையர் காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு, அவருக்கு குரங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டதையடுத்தே, மேலதிக சிகிச்சைக்காக தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதேவேளை, டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த களனியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனுக்கு குரங்குக் காய்ச்சல் உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட்டது.

இந்த நிலையில், நாட்டில் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான இருவரும் தற்போது, தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts