காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, கர்நாடகா முழுவதும், கடந்த சில தினங்களாக வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. தமிழக பதிவெண் உடைய வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட நடிகர்களும் களத்தில் இறங்கி போராடினார். மேலும் இருமாநில நடிகர்களும் மாறி மாறி கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்பிரச்னை தொடர்பாக தன் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது… ‛‛நாம் மொழியற்ற குரங்குகளாய் இருந்தபோதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட வேண்டி வரும்” என்று பதவிட்டுள்ளார்.