குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக கிடந்த இலங்கை நாணயங்கள்

தமிழகத்தில் குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக கிடந்த பெருந்தொகை இலங்கை நாணயங்களை, அந்த நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்.

பெசன்ட் நகரை சேர்ந்த உமா என்பவர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது, ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை பணம் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 11 இலட்சத்து 89 ஆயிரம் ஆகும் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அதனை தொழிலாளி உமா மீட்டு சாஸ்திரி நகர் பொலிசுக்கு தகவல் தெரிவித்தார். பொலிசார் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணத்தை வீசி சென்றவர்கள் யார்? கடத்தல் பணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Related Posts