சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் பிறர் படத்திற்கு பாடிய பாடல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
இவர் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு பாட்டு பாடி வருகிறார்.
சமீபத்தில் வெளியான சண்முகபாண்டியனின் ‘சகாப்தம்’ படத்தில் ‘அடியே… ரதியே…’ என்னும் பாடலை பாடியிருந்தார். தற்போது ஜெயம் ரவிக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் ‘குத்து சாங் மா நீ… ஹிட்டு சாங் மா நீ…’ என தொடங்கும் குத்துப்பாடலை பாடியிருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து வரும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தரின் வசனத்தை வைத்து ஒரு பாடலை உருவாக்கியிருந்தார்கள்.
இதில் தன்னை கேலி பண்ணியதாக கூறி டி.ஆர், ஜெயம் ரவி மற்றும் அந்த படக்குழுவினர் மீது வழக்கு தொடர்ந்தார். இன்னும் இந்த வழக்கு முடிவடையாத நிலையில், ஜெயம் ரவி படத்திற்கு சிம்பு பாடி கொடுத்திருப்பது சினி உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.