கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தீபாவளியை ஒட்டி சின்ன பிரேக் எடுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சுறுசுறுப்புக்கு திரும்பியுள்ளனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அருண் விஜய்தான் வில்லன். ஆனால் பிளாஷ்பேக் காட்சியில் அஜீத்தும், அருண் விஜய்யும் நண்பர்களாக வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பாடல்கூட உள்ளது.
இவர்கள் இணைந்து ஆடும் பாடலை குத்துப் பாடலாக அமைத்துள்ளனர். ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார். விரைவில் இந்தப் பாடல் காட்சியை படமாக்க உள்ளனர்.
டிசம்பர் இறுதியில் அல்லது 2015 பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.