குத்தாட்டத்துடன் தீபாவளி போட்டியில் ஜாக்கிசான்

இந்த ஆண்டு தீபாவளிக்கு நம்ம ஊர் சூப்பர் ஹீரோக்களுடன் களம் இறங்குகிறார் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான். சீனா, இந்தியா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் ‘குங்பூ யோகா’ படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன. ஜாக்கி சானுடன் தமிழ் மற்றும் இந்தி நடிகை அமைரா தஸ்தூர், வில்லன் சோனு சூட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

jakki-jaan

இந்தியாவுக்கு படப்பிடிப்பு வந்த ஜாக்கி இங்குள்ள அனைவரையும் அன்பால் கவர்ந்திருக்கிறார். அண்மையில் அமைராவுக்கு பிறந்த நாள் வந்தபோது சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தியிருக்கிறார் ஜாக்கி. “உங்களுடன் நடித்தது எனக்கு பெருமை என்று சோனுசூட்டுக்கு தன் கைப்பட எழுதிக் கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு இந்திய கலர் கொடுப்பதற்காக நடன இயக்குனர் பராகான் அவரை ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வைத்திருக்கிறார். ஜாக்கியுடன் அமைரா மற்றும் இந்திய நடன அழகிகள் ஆடியிருக்கிறார்கள் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உள்ளிட்ட ராஜஸ்தானின் புகழ்பெற்ற அரண்மணைகளில் இந்த குத்துப்பாட்டு படமாக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒரு லுங்கி டான்சையும் படத்தில் சேர்க்கிறார்களாம்.

அக்டோபர் மாதம் தீபாவளி அன்றோ அல்லது தீபாவளியை ஒட்டியோ படம் வெளிவருகிறது. ஆங்கிலத்தில் படம் தயாரானாலும் சீனம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழியிலும் படம் வெளிவருகிறது. இந்த வருட தீபாவளி ரேசில் ஜாக்கியும் குதிக்கிறார்.

Related Posts