குதிரையோடிய ஆசிரியர் கைது!

வவுனியா – உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மின்சார சபையில் பணியாற்றும் நபரொருவர் சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கான அனுமதி அட்டையும் கிடைத்திருந்தது.

இந்நிலையில் மின்சாரசபையில் பணியாற்றும் குறித்த நபர், கைதுசெய்யப்பட்டுள்ள சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும் ஆசிரியருடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பரீட்சையில் தோற்றுவதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் மீது சந்தேகமடைந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள், குறித்த பரீட்சார்த்தி குறித்து பரிசோதித்தபோது பிறிதொருவருக்காக ஆசிரியர் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்தையடுத்து குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதுடன் இன்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts