குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி! ஊழியர்களுக்கும் அழைப்பு!!

கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.பல்கலை வளாகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதே வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி சார் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதனால் ஊழியர்கள் அனைவரையும் நாளை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புமாறு துணைவேந்தர் அறிவுறித்தியிருப்பதனால், பணிகள் யாவும் வழமைபோல இடம்பெறும் எனவும் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் வீ. காண்டீபன் அறிவித்துள்ளார்.

Related Posts