குட்டிப் பாப்பாவுடன் நடை பழகிய ஒபாமா

வெள்ளை மாளிகையில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து குழந்தையாக மாறியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.

Obama-child

முன்னாள் துணை பத்திரிகைச் செயலாளர் ஜேம் ஸ்மித் தனது பெண் குழந்தையான லிங்கன் ரோஸ் பியர்ஸ் ஸ்மித்தை, வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது குழந்தையைப் பார்த்த ஒபாமா, அதன் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துள்ளார். குழந்தை சிரித்துக் கொண்டே தத்தித் தத்தி நடக்க, ஒபாமா அதை விட அதிக மகிழ்ச்சியுடன் அதற்கு நடப்பதற்கு கற்றுக் கொடுத்தார்.

இந்த அழகிய காட்சியை புகைப்படமெடுத்து தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஒபாமா

Related Posts