குடும்ப பெண் மீது துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது

வவுனியா பறன்நட்டகல் பகுதியில் குடும்ப பெண் மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட இருவரை வவுனியா ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பறன்நட்டகல்லில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இரவு 28 வயதுடைய குடும்ப பெண் குளித்துக்கொண்டு இருக்கும் போது, குறித்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளனர்.

இருந்த போதும் குறித்த பெண் அவர்களிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவம் குறித்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் இருந்து வீடு திரும்பிய தன் கணவனிடம் தெரிவித்ததை அடுத்து, வவுனியா ஒமந்தை பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய அந்த பகுதியை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts