குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க பொது வேட்பாளரை வெற்றிபெறச்செய்வோம்! – அஸ்மின்

குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க பொது வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதில் பங்குதாரர் ஆகுங்கள் என வடமகாணசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்தார்.

ayub-asmin

வவுனியா மாங்குளத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் –

இலங்கை மண்ணில் இருந்து குடும்ப ஆட்சி இல்லாது போகவேண்டும் என்பதற்காவும் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்டும் அதிகமான போராட்டங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக குரல் எழுப்புவதற்காகவும் அவர் ஆளும் தரப்பில் இருந்து எதிர்தரப்பிற்கு வந்துள்ளார் என்பதாலும் ஹுனைஸ் பாரூக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் பாராட்டியுள்ளது.

அவர் தனக்கு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைச்சு பதவிகள் என்பவற்றை ஒதுக்கி தள்ளிவிட்டு மக்கள் நலனுக்காக மக்களின் நன்மைக்கான வெளியேறி வந்துள்ளார். அவருக்கு நல்லிணக்கத்தை நேசிக்கின்ற, நீதியை நேசிக்கின்ற, சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது.

அந்த வகையில் நாமும் அவர் சார்ந்துள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு கை கோர்ப்பதற்கு அணிதிரண்டுள்ளோம்.

மாங்குளம் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நின்றவர்கள். ஆகவே நீங்கள் முன்மாதிரி மிக்க சமூகம் என்ற வகையில் பொதுவேட்பாளரை வெற்றி பெற செய்யும் முயற்சியில் பங்குதாரர் ஆகுங்கள்..- என தெரிவித்தார்.

இக்கலந்துரைடாலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்த ஹுனைஸ் பாரூக் எம்.பி, செட்டிகுளம் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நுகுமான் மாகிர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி மைத்திரிக்கு ஆதரவளித்த முனாகிர் மௌலானா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts