குடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்

கொக்குவில் தாவடி தெற்குப் பகுதியில் குடும்பத் தலைவர் ஒருவர், கும்பல் ஒன்றால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார் என்று சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவரே இந்த முறைப்பாட்டை வழங்கியதுடன், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

“தாக்குதலுக்குள்ளான குடும்பத்தலைவரின் சகோதரியின் மகளை இளைஞர் ஒருவர் காதலிப்பதாக பிரச்சினை எழுந்தது. அந்த இளைஞனை சில நாள்களுக்கு முன்னர் குடும்பத்தலைவர் எச்சரித்திருந்தார்.

அதனால் தனது நண்பர்களுடன் வந்த அந்த இளைஞர் குடும்பத்தலைவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டுச் சென்றுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts