நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன.
இதனால் பலர் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் சென்றிருக்கின்றனர். விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகமே காரணம்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 95 வீதத்துக்கும் அதிகமான வழக்குகள் விவகாரத்துக் கோரிய வழக்குகள். குடும்ப பொருாதார நிலைமையே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த நிலையில் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி குடும் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அடித்தளமிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.