குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை: இந்தியாவில் 11 பெண்கள் பலி

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய சுகாதார முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 11 பெண்கள் மரணமடைந்துள்ளனர்.

sp_women_die_in_india

மேலும் 30 பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பெந்தரி கிராமத்தில் சனிக் கிழமையன்று 83 பெண்களுக்கு ட்யூபெக்டமி எனப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கவனக் குறைவு ஏதும் இல்லை என அதிகாரிகள் மறுத்தாலும், இந்த அறுவை சிகிச்சைகள் அவசரஅவசரமாக செய்யப்பட்டதாக கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

83 பெண்களுக்கும் ஒரே மருத்துவர் ஒரே ஒரு உதவியாளருடன் 6 மணி நேரத்தில் இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தையும் செய்துமுடித்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related Posts