குடியரசு தினத்திற்கு தள்ளிப் போனது விஜய்யின் தெறி டீசர்?

விஜய்யின் தெறி டீசரை படக்குழுவினர் வருகின்ற குடியரசு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதால் தற்போது குடியரசு தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை இன்னும் படம்பிடிக்கவில்லை என்பதால் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு டீசரை வெளியிட அட்லீ திட்டமிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பர்ஸ்ட் லுக் அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் டீசர் தள்ளிப்போனது அவர்களை வருத்தமுறச் செய்திருக்கிறது. விஜய்யின் தெறி வருகின்ற தமிழ்ப் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Related Posts