குடிமகன்களை கலாய்க்கும் ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன்!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் காக்கி சட்டையைத் தொடர்ந்து மீண்டும் போலீசாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் அதை விட ஆக்சன் கலந்த போலீசாக நடிக்கிறார். கூடவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகி என்பதால் அவருக்கு இந்த கதையில் ரொமான்சை குறைத்து வித்தியாசமான வேடத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார் மோகன்ராஜா.

மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பராக படம் முழுக்க வரும் வேடத்தில் ரோபோ சங்கர் நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் இன்றைய குடிமகன்களை கலாய்க்கும் வகையில், படத்தில் ஒரு போட்டி வைக்கிறார்களாம். அதாவது, காலையில் டாஸ்மாக் திறந்ததும் யார் முதல் ஆளாக சரக்கு வாங்கிவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு பத்து சரக்கு பாட்டில் இலவசம் என்கிறார்களாம்.

அதனால், குடிமகன்களை டாஸ்மாக்கை திறப்பதற்குள் கடை முன்பு பெருங்கூட்டமாக கூடி நிற்பதோடு, கடை திறந்ததும், கடையின் கம்பிகேட்டுக்குள் நான் நீயென்று கையை திணித்து ரத்தக் காயங்களுடன், சட்டை கிழிந்த நிலையில், சரக்கு பாட்டிலுடன் வருவார்களாம்.

இந்த காட்சியை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி காட்சியாக படமாக்கி யிருக்கிறாராம் மோகன்ராஜா. இதில் சிவகார்த்தி கேயனும், ரோபோ சங்கர் செம காமெடி செய்திருக்கிறார்களாம்.

Related Posts