குடிபெயர்வு சாராத விஸா விண்ணப்ப முறையில் மாற்றம்: அமெரிக்கா

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

amerecca-Us-Embasy-colombo-USA

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அமெரிக்க தூதரகங்களில் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

புதிய நடைமுறை குறித்த மேலதிக தகவல்களுக்காக செப்டெம்பர் 08ஆம் திகதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை (இலங்கை நேரப்படி) 94-11-7703703 என்ற இலவச தொலைபேசி சேவையினை தொடர்பு கொள்ளலாம்.

இந்த மாற்றங்கள், புதிய திட்டமிடலுக்கான இணைய முகவரி மற்றும் பொது விசா தகவல்களை எமது தூதரகத்தின் http://srilanka.usembassy.gov என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவைகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

புதிய குடிபெயர்வு சாராத விஸா விண்ணப்ப நடைமுறைகள்:

1. உங்கள் விஸா விண்ணப்பப் படிவத்தை(DS -160) Http://ceac.state.gov/genniv பூர்த்தி செய்தல்.

2. செப்டெம்பர் 07, 2014 முதல் எங்கள் புதிய திட்டமிடல் இணையத்தளத்தில் www.ustraveldocs.com/lk கணக்கு ஒன்றை உருவாக்கி, உங்கள் வங்கிக் கட்டணம் செலுத்துவதற்கான வைப்புச் சீட்டை அச்சிடுக.

3. அச்சிட்ட வங்கி வைப்புச் சீட்டை அருகிலுள்ள DFCC வங்கிக் கிளையில் கொடுப்பனவுக்காக சமர்ப்பிக்கவும்.

4. உங்களது கொடுப்பனவு வங்கிக் கணக்கில் பற்றாகுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வேலை நாட்கள் காத்திருக்கவும்.

5. உங்களுடைய வங்கி பற்றுச்சீட்டுக் கட்டணத்தின் இலக்கத்தைப் பயன்படுத்தி உங்களுடைய விஸா விண்ணப்ப நேர்காணலுக்கான நேரத்தை www.ustraveldocs.com/lk பதிவு செய்யவும்.

6. நேர்காணலுக்காக ஒதுக்கப்பட்ட தினத்தில், நேரத்தில் தேவையான ஆவணங்களுடன் தூதரகத்துக்கு சமூகமளிக்கவும்.

7. உங்களுடைய விஸா உறுதி செய்யப்படுமாயின், தூதரகத்தால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான திகதியும், நேரமும் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

தூதரகத்தின் இணையத்தளமும், இலவச உதவி தொலைபேசி சேவை மையமும் மாத்திரமே விஸா தகவல்களுக்கான மற்றும் ஒரு தனிப்பட்ட விஸா விண்ணப்ப சமர்ப்பித்தலுக்கான நேர்காணலுக்கு நேரத்தை முன்பதிவு செய்வதற்கான அங்கிகரிக்கப்பட்ட எமது உத்தியோகப்பூர்வ அங்கங்களாகும். பழைய நடைமுறையின் கீழ் விஸா விண்ணப்ப சமர்ப்பித்தலுக்கான நேர்காணலுக்;கு நேரத்தை முன்பதிவு செய்து கொண்ட விண்ணப்பதாரி, அதே நடைமுறையை பின்பற்ற முடியும்.

ஊடக தகவல் அறிக்கை

1) விஸா விண்ணப்ப நடைமுறையில் ஏன் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது?

உலகெங்கிலும் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களததால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய உலகளாவிய இணைய வழியிலான முறையின் ஒரு அங்கமாக, விஸா விண்ணப்ப நடைமுறை காணப்படுகின்றது. உலககெங்கிலும் பயன்படுத்தப்படும் முறையுடன் இணைக்கும் ஒரு செயற்பாடாக புதிய விண்ணப்ப நடைமுறை அறிமுகம் காணப்படுகின்றது.

2) விஸா விண்ணப்ப நடைமுறையில் ஏற்படுததப்படும் மாற்றங்கள் எவை?

செப்டெம்பர் 7, 2014 முதல் விண்ணப்பதாரிகள் விஸா விண்ணப்ப கட்டணத்தை இலங்கை எங்கிலும் உள்ள 130க்கும் மேற்பட்ட DFCC இன் எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும்.

கட்டணத்தை செலுத்தியவுடன் இணையத்தின் www.ustraveldocs.com/lk. ஊடாக தாமாகவே விண்ணப்பதாரிகள் நேர்காணலுக்கான நேரத்தை ஒதுக்கும் முன்பதிவை மேற்கொள்ளலாம்.

இந்த சேவைக்காக மேலதிக கட்டணம் எதுவும் இல்லை. விஸா விண்ணப்ப கட்டணத்தில் அது உள்ளடக்கப்பட்டுள்ளது.

3) புதிய நடைமுறையானது எந்த வகையில் மேம்பட்டதாகும்?

புதிய நடைமுறையின் ஊடாக விண்ணப்பதாரிகள் தமது விஸா நேர்காணல் நேரம் ஒதுக்கல் முன்பதிவை வீட்டிலிருந்தவாறே இணையம் வழியாக வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணித்தியாலங்களும் மேற்கொள்ள முடியும். இலவச தொலைபேசி சேவை முகவருடனும் நீங்கள் கதைக்க முடியும். குறித்த முகவரின் ஊடாக விஸா விண்ணப்ப நடைமுறை குறித்த உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். புதிய நடைமுறையின் ஊடாக பெரும்பாலான விண்ணப்பதாரிகள் தமது நேர விரயத்தையும், பண விரயத்தையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

4) நான் எவ்வாறு விஸா விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான நேர்காணலுக்கு நேரத்தை முன்பதிவு செய்வது?

இணையத்தளத்தின் ஊடாக விஸா குறித்த தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு முன்னர், www.ustraveldocs.com/lk. என்ற இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் உங்களுக்கான இணைய கணக்கு ஒன்றை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு விஸாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது குடும்ப உறுப்பினரின் தேவையான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்.

இணைய கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. உங்களுடைய கணக்கு உருவாக்கப்பட்டதன் பின்னர், உள்ளூர் DFCC வங்கியில் உங்களுடைய விஸா விண்ணப்ப கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்திய வங்கிப் பற்றுச்சீட்டுடன், உங்களுடைய இணைய கணக்கில் உள்நுழைந்து, அடுத்து வரும் வேலை நாளில், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான நேர்காணலுக்கான முன்பதிவினை நீங்கள் முன்னெடுக்க முடியும்.

5) என்னுடைய விஸா விண்ணப்ப கட்டணத்தை நான் எங்கே செலுத்துவது?

செப்டெம்பர் 07, 2014 முதல் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்ப கட்டணத்தை இலங்கை முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட DFCC வங்கிக் கிளைகளில் எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும். DFCC வங்கிக் கிளைகள் குறித்த தகவல்களுக்கு விஜயம் செய்யுங்கள் http://www.dfcc.lk/branch-network/directory.

6) விண்ணப்பதாரியிடம் இணைய வசதி இல்லையெனில் என்ன செய்வது?

புதிய விஸா விண்ணப்ப நடைமுறையில் அனைத்து விண்ணப்பதாரிகளும் DS-160 படிவத்தை இணையத்தின் ஊடாக பூர்த்தி செய்ய வேண்டும். அந்த நடைமுறையில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. முந்தைய விண்ணப்ப நடைமுறைகளைப் போன்றே, இணையவசதியற்ற விண்ணப்பதாரிகள், தமது குடும்பத்தின், நண்பர்களின் அல்லது நம்பகமான பயண வசதியளிப்பவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

7) அவசரமாக நான் விஸா விண்ணப்பம் சமர்ப்பித்தலுக்கான நேர்காணலுக்கு நேரத்தை முன்பதிவு செய்து கொள்வதாயின் என்ன செய்வது?

அவசர நிலைமைகள் ஏற்படும் என்பதனை நாம் அறிந்து வைத்துள்ளோம். பின்வரும் சூழ்நிலைகளில் இயன்றளவில் விரைவாக உங்களுக்கு விரைவாக நேர்காணலுக்;கான நேரத்தை முன்பதிவு செய்து கொள்வதற்கு நாம் முயற்சி செய்வோம்.

● ஐக்கிய அமெரிக்காவில் நெருங்கிய உறவினரின் மரணம், கடுமையான சுகயீனம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விபத்து

● விண்ணப்பதாரி அல்லது அவர்களது பருவமடையாத பிள்ளைகளுக்கான உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய தேவை

● ஒதுக்கக் கூடியதாகவுள்ள முதலாவது நேர்காணலுக்கான முன்பதிவு நேரத்துக்கு முன்பதாக ஆரம்பிக்கக் கூடிய I-20 அல்லது DS-2019 விஸாவைக் கொண்டுள்ள மாணவர் அல்லது பரிமாற்ற விஜயம் செய்யும் விண்ணப்பதாரி (F/M/J).

● ஒதுக்கக் கூடியதாகவுள்ள முதலாவது நேர்காணலுக்கான முன்பதிவு நேரத்துக்கு முன்பதாக உடனடி தொழில் தேவைக்காக ஐக்கிய அமெரிக்காவுக்ககு எதிர்பாராத விஜயம்.

விண்ணப்பதாரிகள் முதலில் வழமையான நேர்காணலுக்கான முன்பதிவை மேற்கொள்ளவேண்டும். வழமையான நேர்காணலுக்கான தினமானது விண்ணப்பதாரியின் அவசரமான பயணததுக்கான தினத்தை விட காலம் தாமதித்து இருப்பின், www.ustraveldocs.com/lk. என்ற இணைய முகவரியின் ஊடாக அவர்கள் அவசரமான நேர்காணல் முன்பதிவு நேரத்தை கோரமுடியும்.

Related Posts