குடிநீர் போத்தலினுள் மருந்து கலந்து மாணவியை கொலை செய்ய முயற்சி?

குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த குடிநீர் போத்தலினுள் ஏதேனும் மருந்துப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை பாடசாலை ஆசிரியர் ஒருவர் உறுதிபடுத்திய போதிலும், இது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி கல்வியில் சிறந்து விளங்கிய நிலையில், சிறந்த பெறுபேறுகளை பெறுவதை தவிர்க்குமாறு அச்சுறுத்தும் வகையிலான கடிதங்கள் அனுப்பப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து ஆசிரியரிடம் முறையிட்டபோதிலும், அது கவனத்தில் கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில், குறித்த மாணவி தற்போது வைத்தியசாiயில் இருந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts