குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்

நிலவிவரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குடி நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடி நீர் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Related Posts