இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில் சுமார் 4,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150 பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபகரணங்களை பிரித்துக் கொடுக்கும் நிகழ்வு, குருநாகலில் இடம்பெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டார்.