யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த பருவமழை காலத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் மரக்கறிகளைப் பயிரிடுவதில் நாட்டம் குறைந்துள்ளது.
இந்தநிலையில் அதிக விளைச்சலைப் பெறக் கூடிய ஜனவரி மாதத்தில் குறைந் தளவு மரக்கறிகளே உற்பத்தியாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மரக்கறி வகைகள் மிகக்குறைவாகக் கிடைப்பதால் மரக்கறி விற்பனையாளர்கள் மரக்கறிகளை கூடிய விலைக்கு தோட்டப் பயிர்ச்செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி, சாவகச்சேரி, நெல்லியடி, மருதனார்மடம் உள்ளிட்ட மரக்கறிச் சந்தைகளில் கத்தரிக்காய் ஒரு கிலோ 220 ரூபாவுக்கு அதிகமாகவும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 150 ரூபாவுக்கு அதிகமாகவும் வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாவுக்கும் பயற்றங்காய் ஒரு கிலோ 240ரூபாவாகவும் முருங்கைக்காய் ஒரு கிலோ 400 ரூபாவாகவும் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாவாகவும் கோவா ஒரு கிலோ 50 ரூபாவாகவும் கரட் ஒரு கிலோ 100 ரூபாவாகவும் வெண்டிக்காய் ஒரு கிலோ 100 ரூபாவாகவும் லீக்ஸ் ஒரு கிலோ 120 ரூபாவாகவும் கருணைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாவாகவும் வாழைக்காய் ஒரு கிலோ 100 ரூபாவாகவும் மரவள்ளிக் கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாவாகவும் கீரை ஒரு பிடி 25 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனைவிட தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்படுகின்ற மரக்கறிகள் இன்னும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.