குடாநாட்டுக்குள் ஊடுருவிய கள்ளநோட்டுக் கும்பல்! பொலிஸார் தேடுதல் வேட்டை

Rs-5000-cashயாழ்.குடாநாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றினால் 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமான இருக்குமாறு யாழ்.பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

தென்பகுதி ஒன்றிலிருந்து 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் ஒரு கஜஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறித்த வாகனம் இளவாலைப் பகுதியில் தரித்து நின்றதாக இளவாலைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு அதிகாரி விக்கிரமாராட்சி குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பெருட்கள் கொள்வனவு செய்யும் போது 5000 ரூபா நோட்டுக்கள் தொடர்பில் விழிப்பாய் இருக்குமாறு யாழ்.மக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.

இந்த கள்ள நோட்டுக் கும்பலைத் தேடி வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.

Related Posts