குடாநாட்டில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்

kothu_rotty-hotelயாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதன்காரணமாக நுகர்வோர் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சில உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் இந்த நடைமுறை கடைப்பிடிப்பதைக் காணமுடியவில்லை.

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சமநிலையாக தேநீர் 10 ரூபாவாகவும் பால்தேநீர் 20 ரூபாவாக விற்கப்படும் அதே வேளை, நெல்லியடி பருத்தித்துறைப் பகுதியில் தேநீர் 15 ரூபாவாகவும், பால் தேநீர் 25 ரூபாவாகவும் விற்கப்படுகிறது.

உணவு,சிற்றுண்டிகள் அதைவிட மோசமாகவே உள்ளது. உணவக உரிமையாளர்களைக் கருத்துக் கேட்டால் தரம், நிறை என்று பல காரணங்கள் சொல்வதாக கூறப்படுகிறது.

குடா நாட்டில் சீனி, தேயிலை, பால் மா பொறித்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏன் இப்படி மாறுபட்ட விலையில் விற்பனை செய்கின்றனர் என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

Related Posts