Ad Widget

குடாநாட்டில் கொரோனா தாக்கம் பாரதூரமாக அமையலாம் – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் பெப்ரவரி 27 இல் 60 நோயாளிகள். 3 வாரங்களுக்கு முன்னர், மார்ச் 3 இல் எம்மைப் போல் அவர்களும் 100 நோயாளிகள் தானே என்று நிம்மதி அடைந்தவர்கள். ஆனால் சரியாக ஒரு மாதம் மார்ச் 27 இல் 85,268 நோயாளிகளுடன் 1,293 இறப்புக்கள்.

அவர்களுக்கு 30,000 செயற்கைச் சுவாச இயந்திரங்கள் தேவைப் படுகின்றன. யாழ்கு.டாநாட்டில் இருப்பதோ 25-30 வரையான இயந்திரங்களே. எமக்கும் மிகப் பெரும் அழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் வீடுகளில் இருங்கள். என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts