குடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது!

யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருட்கள் பாவனை, வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், யாழில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் சில குழுக்களின் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாறு யாழில் தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக பொலிஸார் பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts