குடாநாட்டில் இன்னமும் 12 ஆயிரம் குடும்பங்கள் மீளக்குடியமரவில்லை!

யாழ். குடாநாட்டில் 10,716 தமிழ்க் குடும்பங்களும், 1,465 முஸ்லிம் குடும்பங்களும் உள்ளடங்கலாக 12,181 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ளன என்று மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மீள்குடியமர்த்தப்பட வேண்டிய 10,716 தமிழ்க் குடும்பங்களில் 1,318 குடும்பங்கள் குடாநாட்டில் உள்ள முகாம்களில் வாழ்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, குடாநாட்டில் தற்போது 190,150 குடும்பங்களைச் சேர்ந்த 617,722 பேர் வசிக்கின்றனர். அத்துடன் போர் முடிவுற்றதன் பின்னர் குடாநாட்டில் 31,118 குடும்பங்களைச் சேர்ந்த 97,052 பேர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியிருந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ். குடாநாட்டில் உள்ள நலன்புரி முகாம்களில் உள்ள 1,318 குடும்பங்களும் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 32 முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts