அடிக்கடி வாயுக் “குண்டு“ போடுபவரா நீங்கள்? கவலையை விடுங்கள்! அது மனித குலத்தின் நலவாழ்வுக்கு நல்லது என்று புதிய ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், ஆசன வாயு வெளியேற்றுதலானது, புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாத நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாம்!
வாயுவை விடுவிப்பவர்களுக்குச் சரி, பக்கத்திலே இருப்பவர்கள் தவிப்பரரே என்று நீங்கள் கேட்கலாம். ’மனிதரால் வெளியேற்றப்படும் ஆசனவாயுவில் ஐதரசன் சல்பேற் பிரதானமாகக் காணப்படுகிறது. இது டிமென்ரியா போன்ற நினைவாற்றலைச் சிதைக்கும் நோய்களிலிருந்து மனிதரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அந்த “நறுமணத்தை“ நுகர நேரும்போது துன்பமைடையாதீர்கள்’ என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
- Friday
- January 24th, 2025