குசல், ரங்­கன ஹேரத்துடன் ஆட்ட நிர்­ணய முக­வர்­களை கைது செய்­யவும்

தடை செய்­யப்­பட்ட ஊக்க மருந்து உட்­கொண்ட குற்­றச்­சாட்டின் பேரில் ஆரம்ப துடுப்­பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் முன்­னணி சுழற்­பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகி­யோரை ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­ப­டுத்த முயன்றவர்­களை கைது செய்து சதி­திட்ட பின்­னணி குறித்து வெளிப்­ப­டுத்­து­மாறு நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு முறை­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விளையாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

kusal-perera-rangana-herath

நடந்து முடிந்த மேற்­கிந்­திய தீவுகள் அணி­யு­ட­னான கிரிக்கெட் தொடரின் போது குறித்த வீரர்கள் இரு­வ­ரையும் ஆட்ட நிர்­ண­யத்­து­க்குட்­ப­டுத்த முகவர் ஒருவர் முயற்­சித்

ததா­கவும் அவர் இலங்கை கிரிக்­கெட்­டுடன் நெருங்­கிய தொடர்பை பேணு­வ­தா­கவும் அவர்கள் தொடர்பில் உடன் விசா­ரணை ஆரம்­பிக்­கு­மாறும் அமைச்­சரின் முறைப்­பாட்­டில் குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் மேற்­கிந்­திய தீவுகள் தொடரின் போது ஆட்ட நிர்­ணய முக­வர்கள் தம்மை அனு­கி­யமை தொடர்பில் குறித்த இரு வீரர்­களும் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­ததன் அடிப்­ப­டையில் விசா­ரணை நடத்­து­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

அமைச்­சரின் முறைப்­பாடு தொடர்பில் நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் கீழ் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

Related Posts