கீரிமலையில் சிறிய கடற்படை முகாம் அகற்றப்பட்டது!

கீரிமலையில் அமைந்திருந்த சிறிய கடற்படை முகாம் இன்று பகல் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

keerimali-navy-01

கீரிமலை கேணிக்கு அண்மையாக மூன்று வீடுகளில் கடற்படையினர் நிலைகொண்டு இருந்தார்கள்.

இதில் ஒரு வீடு ஏற்கனவே உரியரே்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மிகுதியாகவுள்ள இரண்டு வீடுகளிலும் கடற்படையினர் தங்கி இருந்தார்கள்.

இன்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இடத்தில் இருந்த மிகுதியான இரண்டு வீடுகள் மற்றும் இரண்டு தனியாருக்கு சொந்தமான காணிகளும் வலி வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டதைத் தெர்டர்ந்து வீடுகள் மற்றும் காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தனும் பிரதேசச செயலக அபிவிருத்தி அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

Related Posts