கீரிமலையில் வாளுடன் நடமாடிய இளைஞர் கைது!

கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞரொருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயதுடைய இளைஞனையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், இளைஞரொருவர் வாளுடன் நடமாடுவதாக அப்பகுதி மக்கள், காங்கேசன்துறை பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வாளுடன் நடமாடிய சந்தேகநபரை உடனடியாக கைது செய்ததுடன் அவரிடமிருந்த இரண்டரை அடி நீளமான வாளினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் கீரிமலை பிரதான வீதியில் வசிக்கும் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை வாளினால் வெட்டுவதற்கு முற்பட்டிருந்த நிலையிலேயே தாம் கைது செய்தோமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts