கீரிமலையில் பிதிர்க் கடனைச் செலுத்த திரண்ட மக்கள்

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள்.

முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர்.

இன்று விரதமிருந்து கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில் உள்ள நகுலேஸ்வரர் ஆலயத்திலும் வழிபட்டனர்.

இன்றைய தினம் கீரிமலை தீர்த்தக் கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

அதனை பொலிஸாரும், சாரணப் படையினரும் இணைந்து ஒழுங்குக்குள் கொண்டு வந்தனர்.

கடற்கரையில் சாரணச் சிறார்கள் மனிதச் சங்கிலியினை ஏற்படுத்தி பொதுமக்களை கடலின் உட்பகுதிக்குள் செல்ல விடாது பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலுக்குள் இலங்கை கடற்படையினரும் கடற்படைப் படகுகளோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Keerimalai_5

Keerimalai_4

Keerimalai_3

Keerimalai_2

Keerimalai_1

Related Posts