கீரிமலையில் தேவாலய காணி சுவீகரிக்கப்படவுள்ளது!

கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே – 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பான அறிவித்தல் கடிதம் , யாழ்.மாவட்டச் செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், கடற்படையின் சில்லாலை கட்டளைத் தளபதி, ஜே – 222 கிராம அலுவலர், யாழ்.ஆயர் இல்லம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts