கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலதிக ஆசனங்கள் இரண்டு உட்பட 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளின் படி 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி ஆதரவு வழங்கினால் 15 ஆசனங்கள் பலமாக இருக்கும்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் 15 ஆசனங்கள் ஆதரவு கிடைக்கும். ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சி அமைப்பதில் சிக்கலில் சிக்கியுள்ளன.
அதேவேளை, 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்தால் 22 ஆசனங்களுடன் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும்.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும்.
முஸ்லிம் காங்கிரசின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கப்படும் என தீர்மானித்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவுடன் 22 மேலதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸலிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற முடியும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பு தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கிழக்கு மாகாணத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்கும் சக்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு; ஐ.தே.க அறிவிப்பு
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையுடன் கூடி ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தத் தரப்பும் தெளிவான வெற்றியை ஈட்டவில்லை. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பை வெளியிடும் தரப்பினருக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்கும் என ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமக்கும், ஜனநாயகத்திற்கும் குந்தகம் ஏற்படாத வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்தையும, கொள்கைகளையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி நடத்தினால் பூரண ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் இலவசக் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநருக்கு த.தே.கூ கையளிக்கவுள்ளது ?
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கையளிக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு தொலைநகல் மூலம் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு நேற்றையதினம் அனுப்பிவைத்தனர்.
அதேநேரம், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை இன்றையதினம் மாகாண ஆளுநரிடம் நேரில் கையளிக்க உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனம் உட்பட 14 ஆசனங்கள் கிடைத்தன.
இதனிடையே அறுதிப் பெரும்பாண்மை கிடைக்காத நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க த.தே.கூட்டமைப்பும் அரச தரப்பும் முனைந்து வருகின்றன. அதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தேவைப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டச் சேர்ந்து ஆட்வியமைக்க தயாராக உள்ளதாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க அறிவிப்பை விடுத்திருந்தார். அதனையடுத்தே, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை ஆளுநருக்கு கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசுடன் கூட்டமைப்பு சேருமா?
இதேவேளை கிழக்குமாகாணத்தில் தற்போதுள்ள நிலையில் அரசுடன் கூட்டமைப்பு இணைந்து ஆட்சியமைத்தால் முஸ்லிம் காங்கிரஸ் இனது பேரம்பேசும் திறனைக்குறைத்து கூடிய கோரிக்ககைகளை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துதெரிவிக்கின்றனர்.இது தேசிய அரசாங்கம் ஒன்றுக்கான பரீட்ச்சார்த்தமாககூட இருக்கமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர் முஸ்லிம்காங்கிரஸ் இனை நம்பினாலும் ஐக்கியதேசிய கட்சியை நம்பமுடியாது எப்போதாவது அவர்கள் அரசுபக்கம் தாவினால் 19 இடம் அவர்களுக்கு கிடைத்து கூட்டமைப்பு ம் முஸ்லிம் காங்கிரசும் இணைந்த ஆட்சியை கவிழ்க்க முடியும்
எனவே அரசும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்த ஆட்சியைதவிர்க்க கிழக்குமாகணத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஒரே அரசியல் சாணக்கியமாக அரசுடன் இணைந்து ஆட்சியமைத்து கொள்வதாகவே இருக்கமுடியும் தவறின் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாககூடிய வாய்ப்புக்களே அதிகம் எனவும் காலப்போக்கில் கூட்டமைப்பு கிழக்குமாகாணத்தினையும் இழக்கவேண்டிவரலாம் இந்நிலையில் கூட்மைப்பு என்னசெய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்!