கிழக்கு எழுக தமிழ் பேரணி; எழுச்சியுடன் ஆரம்பம்

கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார்.

காலையில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கீகரி அங்கீகரி எங்கள் தாயகத்தை அங்கீகரி, சுயநிர்ணயத்தை அங்கீகரி, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், இணைந்த வடக்கு கிழக்கே எமது தாயகம், போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணைகள் வேண்டும், பிறந்த மண்ணே எமது வாழ்விடம், ஒற்றையாட்சி தீர்வல்ல சமஷ்டி அடிப்படையிலான ஒரு கூட்டாட்சியே எமக்கு தேவை, கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனவாத மேலதிக்கத்தை நிறுத்துவதை வலியுறுத்துகின்றோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு எழுக தமிழ் பேரணியில் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts