கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு நிர்வாகம் அறிவிப்பு!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களின் விடுதி வசதிகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைப்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த மாணவர்கள் தமது உடமைகளுடன் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டத்திற்குள் தங்கியிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூண்டுதலாலேயே மாணவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படாது என இந்த வருட ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கே.ஈ. கருணாகரம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Related Posts