கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.
கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முதல் கட்டமாக நேற்று, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.