கிளி.யில் பிக்கப் வாகனத்தை மோதித் தள்ளியது புகையிரதம்: இருவர் படுகாயம்

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை புகையிரதம் மோதியதில் வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் தெரிய வருவது,

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த குறுந்தூர புகையிரதம் கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தி, உருத்திரபுரம் வீதியில் புகையிரத கடவையைக் கடந்து செல்ல முற்பட்ட பிக்கப் வாகனத்தை மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts