கிளி.கொலை சம்பவம் – வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது

கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக, ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts