கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்தும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார்.

தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுளார்.

அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளியொருவரும் தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts