கிளிநொச்சி விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கட் அணியில் விளையாட வாய்ப்பு!! வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை!

கிளிநொச்சி பளையை சேர்ந்த செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் 23வயதுடைய வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை இன்று (09.08.2017) காலை 9மணியளவில் வன்னி பிராந்தி பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்திற்கு அழைத்து கலந்துரையாடிய வன்னி பிராந்திப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்

அவரது பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் தான் தயாராக உள்ளதாகவும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் அவரிடத்தில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பளையைச் சேர்ந்த கடினப்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளரான செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ்யின் திறமைகளை தொலைக்காட்சி ஒன்றின் மூலமாக அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இது குறித்து இன்று அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மேலும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்

Related Posts