கிளிநொச்சி விபத்தில் முதியவர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிப்போ சந்தி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில், கிளிநொச்சி ஆனந்த நகரைச்சேர்ந்த 75வயதான அப்பன் நல்லத்தம்பி என்பவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனகபுரத்தை நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டியும் டிப்போ சந்தியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புதன்கிழமை இரவு 9.35 மணியளவில் இடம்பெற்ற இந்தவிபத்தில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாமடைந்திருந்த துவிக்சக்கரவண்டியை செலுத்திவந்தவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts