கிளிநொச்சி- கரடிப்போக்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறுகண்டியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த வான் ஒன்று, பண்ணைப் பகுதியில் திடீர் என குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இதன்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.