கிளிநொச்சி வாள்வெட்டு!!: 6 பேர் கைது; முக்கிய சந்தேகநபர்கள் யாழில்?

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்படுகின்றனர். சம்பத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் உள்பட ஒன்பது பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றிரவு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி செல்வநகர்ப் பகுதியில் உள்ள வீட்டுக்கு பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்கிளில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உள்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்தனர்.

அத்தோடு மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டதோடு, மற்றொரு மோட்டார் சைக்கிள் அடித்து சேதமாக்கப்பட்டது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டது. இரண்டு வீடுகள் உடமைகள் சேதமாக்கப்பட்டன.

Related Posts