கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts