கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனம்

கிளிநொச்சி- முல்லைத்தீவு விசேட கல்வி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ் விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அவற்றின் உட்கட்டுமான அமைப்புக்களை மேம்படுத்தவுள்ளது. சிவில் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரீட்சை வைக்கப்பட்டு பின்னர் நேர்முகப்பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts